ராசிபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :3482 days ago
ராசிபுரம்: ராசிபுரத்தில், யுகாதி விழாவை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ராசிபுரம் கச்சேரி தெருவில் உள்ள அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலில் யுகாதி விழாவினை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது. வாசனை திரவியங்களால் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, பின், தங்க காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், பொன்வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வரதராஜபெருமாள் வீதி உலா அழைத்து வரப்பட்டார். * ராசிபுரம் கவுரவ பலிஜிவார் நாயுடுகள் சங்கம் சார்பில், யுகாதி விழா சங்க ராமர் பஜனை மடத்தில் நடந்தது.