முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
ADDED :3542 days ago
சங்ககிரி: சங்ககிரி அருகே, வடுகப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா, மார்ச், 22ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பக்தர்கள் அலகு குத்தி, அக்னிசட்டி ஏந்தியும் பூவினால் அலங்கரிக்கப்பட்ட கரகங்களை தலையில் எடுத்து ஊர்வலமாக வந்து சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின், சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.