உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை மாரியம்மன் தேர் சீரமைப்பு பணிகள் துவக்கம்!

உடுமலை மாரியம்மன் தேர் சீரமைப்பு பணிகள் துவக்கம்!

உடுமலை: உடுமலையில் மாரியம்மன் கோவில் தேரோட்ட வைபவம், 28ம்தேதி நடப்பதையொட்டி, தேர் சீரமைப்பு பணிகள் துவங்கியுள்ளன.  உடுமலையின் காவல் தெய்வமாக எல்லையில் வீற்றிருக்கும் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, இப்பகுதி மக்கள் மட்டுமின்றி, சுற்றுப்பகுதி  மக்களும் கொண்டாடும் பிரசித்திபெற்ற திருவிழாவாகவே உள்ளது. விழா துவங்கியதன் அடையாளமாக, கடந்த 12ம் தேதி  நோன்பு சாட்டப் பட்டது. வரும் 19ம் தேதி கம்பம் போடுதல் நிகழ்ச்சிகளும் நடக்கிறது. விழாவின் முக்கிய அம்சமான தேரோட்ட நிகழ்ச்சிக்கான முதற்கட்ட பணிகள்  துவங்கியுள்ளன. அம்மன்  திருவீதி உலா வரும் தேர் நிலையிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !