காலை மாலை பெயர் வந்தது எப்படி?
ADDED :3427 days ago
காலையில் கிழக்கில் சூரியன் உதிக்கிறது. அப்போது சூரியன் சர்வ வியாபியான விஷ்ணுவின் தாமரைத் திருவடிகளைச் சரணடைந்து தன் அன்றாட பணியைத் தொடங்குகிறார். திருமாலின் திருவடிகளை (கால்கள்) தரிசிக்கும் நேரம் என்பதால் அந்த வேளையை காலை என்பர். சூரியன் மறையும் மாலைப் பொழுதில் திருமாலை அடி முதல் முடி வரை முழுமையாகத் தரிசிப்பார். அதனால் அதற்கு மாலை என்று பெயர் வந்தது.