கன்னிவாடி கும்பாபிஷேகம்
ADDED :3453 days ago
கன்னிவாடி: கசவனம்பட்டி அருகே கோனுாரில் சந்தனமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
கணபதி பூஜையுடன் துவங்கி, இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. விசேஷ பூஜைகளுக்குப்பின், கும்பங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. அம்மனுக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. பொங்கல் அழைப்பு, கிராம அபிஷேகம், அன்னதானம் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.