மாம்பழ அபிஷேகம்!
ADDED :3804 days ago
திருச்சி, உறையூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவெக்காளி அம்மனுக்கு ஆனி பவுர்ணமி அன்று மாம்பழங்களால் அபிஷேகம் நடைபெறும். அன்று கூடை கூடையாக மாம்பழங்களை அம்மன் மீது அபிஷேகிப்பர். பிறகு அந்த மாம்பழங்களை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவர். திருச்சி, மலைக்கோட்டையில் தாயுமான சுவாமிக்கு ஆனி பவுர்ணமி அன்று வாழைப் பழத்தார்களைச் சமர்ப்பித்து தங்கள் குடும்பம் வாழையடி வாழையாக வாழ பக்தர்கள் வேண்டிக் கொள்வர்.