உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்கோட்டை முருகர் கோவிலில் அபிஷேகம்

ஊத்துக்கோட்டை முருகர் கோவிலில் அபிஷேகம்

ஊத்துக்கோட்டை: கிருத்திகை விழாவை ஒட்டி, முருகர் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவிலில், கிருத்திகை விழாவை ஒட்டி, அங்குள்ள முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதேபோல், பஜார் பகுதியில் நாகவல்லியம்மன் கோவிலில் உள்ள முருகப் பெருமான் கோவில், தாராட்சி லோகாம்பிகை உடனுறை பரதீஸ்வரர் கோவில், சுருட்டப்பள்ளி சர்வமங்களாக சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், ராமகிரி மலை மீதுள்ள முருகப் பெருமாள் கோவில் உள்ளிட்ட ஏராளமான முருகப் பெருமான் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !