உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துக்குமார சுவாமி கோவிலில் உழவாரப்பணி

முத்துக்குமார சுவாமி கோவிலில் உழவாரப்பணி

பல்லடம்:பல்லடம் ஒன்றியம் மாதப்பூரில், அறநிலையத்துறையின் கீழ், முத்துக்குமார சுவாமி கோவில் உள்ளது. திருப்பூர் சேக்கிழார் புனிதர் பேரவையின் சார்பில், இக்கோவிலில் உழவாரப்பணிகள் நடைபெற்றன. இதில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கோவிலை, தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சேக்கிழார் புனிதர் பேரவை நிறுவனர், முத்து நடராஜன் துவக்கி வைத்தார்.சேக்கிழார் குழு மேற்பார்வையாளர் சத்யா கூறுகையில், "" மாதம் ஒரு கோவிலை தேர்ந்தெடுத்து, முதலாவது ஞாயிறு தோறும், உழவார பணிகளை மேற்கொள்கிறோம். வரும், 13, 14ல் சதுரகிரிமலை சென்று, உழவாரப்பணிகளை செய்கிறோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !