உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணர் சிலைகளின் அணிவகுப்பு

கிருஷ்ணர் சிலைகளின் அணிவகுப்பு

கோவை: டவுன்ஹால், பூம்புகார் விற்பனை நிலையத்தில், கிருஷ்ணா தரிசன கண்காட்சி துவங்கியுள்ளது. தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக்கழகம், பண்டிகை கால சிறப்பாக, துவங்கியுள்ள இச்சிறப்பு விற்பனையில், பல வகையான கிருஷ்ணர் சிலைகள் அணிவகுக்கப்பட்டுள்ளன. கண்காட்சியில், காகிதக் கூழால் செய்யப்பட்ட கிருஷ்ணர் சிலைகள், பஞ்சலோகம், பித்தளை சிலைகள், தஞ்சை ஓவியத்தில் கிருஷ்ணர் உருவம், நுாக்கமர கிருஷ்ணர் உட்பதிப்பு வேலைகள், ஜெய்ப்பூர் ஓவியத்தில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், பித்தளை விளக்குகள், கருங்கல் சிற்பங்கள், மரப்பொம்மைகள், பித்தளை சிற்பங்கள், சந்தன மரச்சிற்பங்கள், பட்டு துணியில் வரையப்பட்ட ஓவியங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. ஆக.,26 வரை நடக்கும் கண்காட்சியை, காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை கண்டு ரசிக்கலாம். அனைத்து பொருட்களுக்கும், 10 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !