பெரியாண்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக முதலாமாண்டு விழா
ADDED :3380 days ago
பெ.நா.பாளையம்: பேளூர் கரடிப்பட்டி பெரியாண்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக முதலாமாண்டு விழா, நேற்று நடந்தது. பெத்தநாயக்கன்பாளையம், கொட்டவாடி, பேளூர் கரடிப்பட்டி மற்றும் அபிநவம் கிராமங்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், கடந்த ஆண்டு நடந்தது. அதன், முதலாமாண்டு விழாவையொட்டி, கோவிலில் சிறப்பு யாக பூஜையும், காலை, 8 மணிக்குமேல், விநாயகர், வீரபத்திரசாமி, பெரியாண்டிச்சியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு, சிறப்பு பூஜை நடந்தது. மதியம், 1 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.