உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

புதுச்சேரி: தஞ்சை அடுத்த நாஞ்சிக்கோட்டை மகாமாரியம்மன் கோவிலின் அஷ்டபந்தன  மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.  தஞ்சையை  அடுத்த நாஞ்சிக்கோட்டை ஆரோக்கிய நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மகாமாரியம்மன் கோவிலில், இச்சா ஞான கிரியா  சக்தியாக அருள் பாலித்து  கொண்டிருக்கும் மகா மாரியம்மன் அன்னைக்கும், வலம்புரி விநாயகர், பாலமுருகன் மற்றும் புதியதாக அமைக்கப் பட்டுள்ள பேச்சியம்மன் ஆகிய  தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக  முதல் நாள் யாகசாலை வளாகத்தில் 6 அடி உ யரமுள்ள சைக்கிள் பிராண்ட் ஊதுபத்தியை அதன்  நிறுவன மேலாளர்கள் ராமமூர்த்தி,  சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் தீபம் ஏற்றி தொடங்கி   வைத்தனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்  மற்றும் திரளான பக்தர்கள் கலந்து  கொண்டு மகா மாரியம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !