சமயபுரம் மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்
ADDED :3313 days ago
நந்தம்பாக்கம்: குன்றத்துார் அருகே நந்தம்பாத்தம் பகுதியில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கோவில் அண்மையில் சீரமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து நான்கு கால பூஜைகள் செய்யப்பட்டு, கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், நந்தமப்பாக்கம், சிறுகளத்துார்,
பூந்தண்டலம் பக்தர்கள் பங்கேற்றனர்.