உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விவசாய நிலத்தில் புதைந்த சுயம்பு லிங்கத்திற்கு பூஜைகள்

விவசாய நிலத்தில் புதைந்த சுயம்பு லிங்கத்திற்கு பூஜைகள்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே விவசாய நிலத்தில் கிடைத்த சுயம்பு லிங்கத்திற்கு, சிறப்பு பூஜைகள் நடந்தது.

விக்கிரவாண்டி அருகே வேலியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் குமாரகிருஷ்ணன். இவருக்கு சொந்தமாக விவசாய நிலத்தில், தற்போது கொய்யா மரங்களை சாகுபடி செய்துள் ளார். இதனருகே உள்ள அய்யனார் கோவிலுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன் வந்த பூசாரி ஒருவர், அருள்வாக்கு கூறியுள்ளார். இதில், குமாரகிருஷ் ணன் நிலத்தில் சுயம்பு லிங்கம் புதைந்து கிடப்பதாகவும், பூஜைகள் செய்ய வேண்டுமென கூறியுள்ளார். இதையடுத்து, கோவில் நிர்வாகிகள் அந்த நிலத்தில் உள்ள மணல் புற்றை அகற்றியபோது, 4 அடி உயரமுள்ள சிவலிங்கம் பீடத்துடன் புதைந்திருந்தது. இதையறிந்த வேம்பி, வேலியந்தல், கஞ்சனுார், அசோகபுரி, பூங்குணம், உலகலாம்பூண்டி, தும்பூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து லிங்கத்தை வழிபட்டு, சிறப்பு பூஜைகளை செய்ய துவங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !