உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவதியம்மன் கோயில் திருவிழா கோலாகலம்

பகவதியம்மன் கோயில் திருவிழா கோலாகலம்

கம்பம், கம்பம் பகவதியம்மன் கோயில் திருவிழா கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. காமுகுல ஒக்கலிக கவுடர் சமுதாயம் சார்பில் நடத்தப்படும் இந்த விழாவில் முக்கிய நிகழ்வான மாவிளக்கு எடுத்தல் நேற்று முன்தினம் இரவு 2 மணிக்கு துவங்கியது. ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பொங்கல் வைத்தனர். பின்னர் நடந்த முளைப்பாரி ஊர்வலத்தில் பெண்கள் முளைப்பாரியுடன் முக்கிய வீதிகள் வழியாக சென்று முல்லைப் பெரியாற்றில் கரைத்தனர். நேற்று மாலை நந்தகோபாலன் கோயில் வளாகத்தில் இருந்து கிளம்பிய வண்டிவேஷ நிகழ்ச்சியில் ஸ்ரீமன் நாராயணன், கருமாரி அம்மன், நரசிம்ம அவதாரம், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த வேஷம் உள்ளிட்ட பல்வேறு வேஷங்களில் பக்தர்கள் 20 க்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்பட்ட வண்டிகளில் வந்தனர். 4 மணிக்கு கிளம்பிய வண்டிவேஷம் நந்தகோபாலான் கோயில் வீதி, நாட்டுக்கல், காந்திஜிவீதி வழியாக மீண்டும் நந்தகோபாலன் கோயிலை இரவு 10:00 மணிக்கு அடைந்தது. முன்னதாக பகவதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !