உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் முருகன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா

திருச்செந்தூர் முருகன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா

துாத்துக்குடி: திருச்செந்துார் முருகன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் முருகன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா நடந்தது. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30க்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிேஷகம் நடந்தது. மற்ற கால வேளை பூஜைகள் நடந்தது. மூலவர், ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிேஷகம், பூஜைகள் நடந்தது. ஜெயந்திநாதர் வள்ளி,தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கடற்கரையில் உள்ள மகா மண்டபத்தில் நாரணி தீபம் கொண்டு வரப்பட்டது. சொக்கபனையில் நாரணி தீபம் ஏற்றப்பட்டு இரவு 7.30 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் தங்கரதத்தில் எழுந்தருளி கிரி பிரகாரம் வலம் வந்து கோயில் வந்து சேர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !