உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) அரசு வகையில் சலுகை

கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) அரசு வகையில் சலுகை

நேர்மையாக செயல்படும் கும்பராசி அன்பர்களே!

இந்த மாதம் சூரியன் விருச்சிகத்தில் இருந்து தனுசுவிற்கு வந்தாலும்  நன்மையை வாரி வழங்குவார்.  சுக்கிரன் டிச.28க்கு பிறகு நற்பலனை கொடுப் பார். தற்போது சாதகமாக நின்று நற்பலனை தந்து கொண்டிருக்கும் புதன் டிச.19ல்  வக்ரம் அடைந்து விருச்சிகத்திற்கு வந்தாலும், அதன் பின்  ஜன.8ந்  தேதி  வக்ரம் நிவர்த்தி அடைந்து பழைய இடத்திற்கே மாறினாலும் அவரது நற்பலன் தொடரும். சூரியனால்  சமூக மதிப்பு அதிகரிக்கும். அரசு  வகையில் நன்மை கிடைக்க வாய்ப்புண்டு. எந்த ஒரு முயற்சியும் தடையின்றி கச்சிதமாக முடிப்பீர்கள். பணப் புழக்கம் கையில் அதிகரிக்கும்.  குடும்பத் தேவை அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே அன்பு நிலைத்திருக்கும்.   டிச.28க்கு  பிறகு பெண்களால் நன்மை  கிடைக்கும். அவர்களால்  பொன், பொருள் சேரும். விருந்து, விழா என அடிக்கடி  சென்று வருவீர்கள். ஆடம்பரப்  பொருள் வாங்க வாய்ப்புண்டு. சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டாகும்.  டிச.28,29,30 ஆகிய நாட்களில் உறவினர் வருகையால்   நன்மை கிடைக்கும்.  ஜன.9,10ல் உறவினர் வகையில் வீண் விரோதம் உருவாக வாய்ப்புண்டு. எனவே சற்று  ஒதுங்கி இருக்க வேண்டும். ஜன.2,3ல்  பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர்.

தொழில், வியாபாரத்தில் அமோக  லாபம் கிடைக்கப் பெறுவர். கூட்டாளிகளிடையே ஒற்றுமை மேம்படும். அரசு வகையில்   சலுகை கிடைக்கும்.  புதிய தொழில் தொடங்குபவர்கள் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க வாய்ப்புண்டாகும். சிலர் வெளிநாட்டு ஒப்பந்தம் மூலம் தொழிலை ÷ மம்படுத்துவர். டிச.19 முதல் ஜன.8  வரை பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகத்தில்  லாபம்   உயரும். டிச.31, ஜன.1,4,5,6ல் சந்திரனால் தடை உருவாகலாம். டிச.17,18,  ஜன.13ல்  அதிர்ஷ்டவசமாக ஆதாயம் வரும். கேது, செவ்வாயால்   அவ்வப்போது போட்டியாளர் தொல்லை  ஏற்படலாம்.

பணியாளர்கள்  நல்ல வளர்ச்சி காண்பர். பதவி, சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்பட வாய்ப்புண்டு.  அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை எளிதில் நிறைவேறும். விரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்கும். டிச.19 முதல் ஜன. 8  வரை சக ஊழியர்கள்   ஆதரவுடன் இருப்பர். டிச. 25,26,27ல் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.

கலைஞர்களுக்கு கடந்த மாதத்தில் இருந்த மந்தநிலை மறையும்.  எதிர்கால  வளர்ச்சிக்கான புதிய சூழ்நிலை  உருவாகும். முயற்சியில் இருந்த  தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் டிச.28க்கு பிறகு விலகும். சக கலைஞர்களின் மத்தியில் புகழுடன் இருப்பீர்கள். பெரிய நிறுவனங்களில் புதிய  ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். பெண்கள்  முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருப்பர்.

அரசியல்வாதிகள், சமூக நல சேவர்கள் சிறப்பான பலனைப் பெறுவர். தொண்டர் மத்தியில் செல்வாக்கு உயரும்.

மாணவர்கள் தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்வர். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். புதனும் சாதகமாக இருப்பதால் போட்டிகளில்  பங்கேற்று  வெற்றி காண்பர்.

விவசாயிகள்  நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வளர்ச்சி காண்பர். கால்நடைவளர்ப்பின் மூலம் வருமானம் உயரும். வழக்கு விவகாரங்களில்  மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம். புதிதாக நிலம் வாங்கும் எண்ணம் தள்ளிப் போகலாம்.

பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு வங்கி கடன்  எளிதாக கிடைக்கும்.  வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். பணிபுரியும் பெண்களுக்குப் புதிய பதவி தேடி வரும். ச÷ காதரர்களின் மூலம் பண உதவி கிடைக்கும்.

நல்ல நாள்: டிச.17,18,19,20,25,26,27,28, 29,30, ஜன. 2,3,7,8

கவன நாள்: டிச. 21,22 சந்திராஷ்டமம். இந்த நாட்களில் அனாவசியமாக எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும். சுபநிகழ்ச்சி குறித்த ÷ பச்சைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட எண்: 2,6 நிறம்: செந்துõரம், பச்சை

பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். சனியன்று சனிபகவானுக்கு எள் எண்ணெய் தீபமேற்றுங்கள். ராகு காலத்தில்  நடக்கும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !