உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) போட்டியில் வெற்றி

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) போட்டியில் வெற்றி

நல்ல மனம் படைத்த மீனராசி அன்பர்களே!

மாதம் முழுவதும் நன்மை படிப்படியாக அதிகரிக்கும். திருப்தியற்ற நிலையில் இருந்த சூரியன் 10ம் இடத்திற்கு வருவதால்  நற்பலன் அளிக்கத்  தொடங்குவார்.  புதன் டிச.18 வரையும்,  ஜன.7க்கு பிறகும் தனுசு ராசியில் இருந்து நன்மையை வாரி வழங்குவார்.  டிச.19 முதல் ஜன.7 வரை புதன்  வக்ரம் அடைந்து விருச்சிகத்தில் இருப்பதால்  நன்மை தர இயலாது.  சுக்கிரன் டிச.29 வரை மகர ராசியில் இருந்து  நற்பலன் கொடுப்பார். உங்கள்  ராசிக்கு 7ல் இருக்கும் குரு, 6ல் உள்ள ராகு ஆகியோரால் நன்மை தொடர்ந்து கிடைக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில்  ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மக்கள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். கையில்  நல்ல பணப்புழக்கம்  இருக்கும். தேவை அனைத்தும் பூர்த்திய õகும். வாழ்வில் ஆடம்பர வசதி  கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.  தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள்  விரைவில் கைகூடும். தம்பதியிடையே அன்பு மேலோங்கும்.  விருந்து விழா என அடிக்கடி சென்று வருவீர்கள்.  சகோதரர்கள்  உதவிகரமாக செய ல்படுவர்.  ஜன.4,5,6ல் எதிர்பார்ப்பு நிறைவேற வாய்ப்புண்டு. டிச.31,  ஜன.1ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.   டிச.16,  ஜன.11, 12ல் உறவினர் வகையில் பிரச்னை உருவாகலாம். சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. மாதத் தொடக்கத்திலும், மாத இறுதியிலும்  பெண்களின் ஆதரவு கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். உடல்நிலை சிறப்பாக இருக்கும்.

தொழில், வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். கடந்த மாதம் இருந்த பின்தங்கிய நிலை இருக்காது. லாபம் படிப்படியாக  அதிகரிக்கும். புதிய வியாபாரத்தில் ஈடுபடவும் வாய்ப்புண்டு. ஜன.2,3,7,8ல்  சந்திரனால் சிறு தடைகள் வரலாம். டிச.19,20ல் எதிர்பாராத வகையில்  வருமானம் கிடைக்கும்.பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகத்தில்  நல்ல லாபம் காணலாம்.

பணியாளர்களுக்கு  சக ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். டிச.19 முதல் ஜன.7 வரை வேலையில் பொறுமை தேவை. இந்த காலத்தில் அதிகமாக  உழைக்க வேண்டியதிருக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது நல்லது.  கோரிக்கைகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படலாம். முக்கிய  பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். வேலை காரணமாக பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். டிச.28,29,30ல் சிறப்பான பலனை எதிர்÷ நாக்கலாம்.

கலைஞர்களுக்கு  மாத முற்பகுதி  சாதகமான காலகட்டமாக அமையும். பெண்கள் ஆதரவுடன் இருப்பர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வசதி  வாய்ப்பை பெற்று மகிழ்வர். டிச.28க்கு பிறகு சற்று மந்த நிலையைச் சந்திப்பர்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி பெற்று மகிழ்வர்.

மாணவர்கள் டிச.19 முதல் ஜன.7 வரை அக்கறையுடன் படிப்பது அவசியம். குரு சிறப்பாக இருப்பதால் உங்கள் முயற்சிக்கு  தகுந்த பலன்  கிடைக்காமல் போகாது. ஆசிரியர்களின் அறிவுரை  வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.  மாத இறுதியில்  புதன் சாதகமான இடத்திற்கு வருவதால் ÷ பாட்டிகளில் பங்கேற்று  வெற்றி காண்பீர்கள்.

விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். உழைப்புக்கேற்ப வருமானம் கிடைக்கும். பழவகைகள், காய்கறிகள், கீரை வகைகள் ÷ பான்றவற்றில் நல்ல மகசூல் காணலாம். கால்நடைச் செல்வத்தால் ஆதாயம் அதிகரிக்கும்.  வழக்கு விவகாரத்தில் சுமாரான பலன் கிடைக்கும்.  புதிய  வழக்கில்  சிக்க வேண்டாம்.

பெண்கள் கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவர். குழந்தைகளால் பெருமை கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இ ருப்பர். டிச.21,22ல் சிறப்பான பலனைக் காணலாம். சகோதரர்கள் ஆதரவுடன் இருப்பர். விருந்து விழா என சென்று வருவீர்கள். ஜன.9,10ல்  புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து சீதனம் கிடைக்க பெறலாம்.      உடல்நிலை சிறப்பாக  இருக்கும்.

நல்ல நாள்: டிச. 19,20,21,22,28,29,30,31, ஜன. 1,4,5,6,9,10

கவன நாள்: டிசம்பர் 23,24  சந்திராஷ்டமம். இந்த நாட்களில் அனாவசியமாக எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும். புதிய முயற்சிகள்,  சுபநிகழ்ச்சி குறித்த பேச்சை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்: சிவப்பு, மஞ்சள்

பரிகாரம்: சனீஸ்வரரை வழிபடுங்கள். செவ்வாயன்று முருகன் கோவிலுக்கு செல்லுங்கள். குலதெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு தழை போடுங்கள்.  வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு வெண்பட்டு சாத்தி வணங்குங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !