உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறையிலிருந்து சபரிமலைக்கு பக்தர்கள் பாதயாத்திரை

வால்பாறையிலிருந்து சபரிமலைக்கு பக்தர்கள் பாதயாத்திரை

வால்பாறை : வால்பாறையிலிருந்து ஐயப்ப பக்தர்கள் பாதயாத்திரையாக சபரிமலைக்கு சென்றனர். கோவை மாவட்டம் வால்பாறையில், ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலையிட்டு விரதமிருந்து சபரிமலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், சின்கோனா குருசாமி ஏழுமலை தலைமையில் ஐயப்ப பக்தர்கள் ஆண்டு தோறும் வால்பாறையிலிருந்து, 360 கி.மீ., தொலைவில் உள்ள சபரிமலைக்கு பாதயாத்திரையாக நடந்து செல்கின்றனர். இங்கிருந்து கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் அங்கு செல்கின்றனர். இவர்கள் 14 நாட்கள் நடந்தே சென்று மகரஜோதியன்று ஐயப்பனை தரிசிப்பர். தேவையான உணவு மற்றும் பொருட்களை உடன் வாகனங்களில் எடுத்துச்செல்வர். வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலிருந்து நேற்றுமுன்தினம் காலை பாதயாத்திரையாக புறப்பட்டனர். அவர்கள் சோலையார் சித்தி விநாயகர் கோவில், பன்னிமேடு, கேரள மாநிலம் மளுக்கப்பாறை, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, அம்பலப்பாறை, வாட்டுமரம், எரிமேலி, பெருவழி வழியாக சபரிமலைக்கு செல்கின்றனர். முன்னதாக சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு வால்பாறை அகிலபாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !