மோட்ச வாசம்!
ADDED :3590 days ago
புதிய வைகுண்டநாதர் கோயில் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ளது. 95 வருட புராதனமான இக்கோயிலில் மோட்சத்திற்கு வழிகாட்டும் தெய்வமான வைகுண்டநாதரின் சன்னதியில் வந்து பிரார்த்தித்தால் வைகுண்டவாசம் செய்யும் புண்ணியம் கிடைக்குமென்பது நம்பிக்கை. வைகுண்டநாதர் வலது காலை மடித்துக் கையை அதன் மேல் வைத்து அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசிக்கும் பாணியைக் காண கண்கோடி வேண்டும். குளிர்காலத்தில் இக்கோயிலுள்ள எல்லா விக்ரகங்களுக்கும் அழகிய வண்ணங்களில் தலையில் கம்பளி குல்லா அணிவிக்கிறார்கள்.