உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு வெளி மாநில பக்தர்கள் அதிகரிப்பு

வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு வெளி மாநில பக்தர்கள் அதிகரிப்பு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு, வெளி மாநில பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா என, பிற மாநில பக்தர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோவில் நிறைந்த பகுதியாக உள்ள திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு, நாள்தோறும் வந்தவண்ணமாக உள்ளனர். இங்குள்ள, மலைக்கோவில் மற்றும் தாழக்கோவிலுக்கு சென்று வழிபடுதல், கிரிவலப்பாதை சுற்றுதல், சங்கு தீர்த்த குளத்தில் நீராடுதல் என, பக்தர்கள் தினமும் வந்தபடி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !