திருப்பரங்குன்றம் கோயில் ரூ. 20 லட்சம் வருமானம்
ADDED :3513 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுள்ள 36 நிரந்தர உண்டியல்கள் கோயில் துணை கமிஷனர் செல்லத்துரை முன்னிலையில் எண்ணப்பட்டன. அதில் 20 லட்சத்து 27 ஆயிரத்து 646 ரூபாய், தங்கம் 90 கிராம், வெள்ளி 794 கிராம் இருந்தது. கோயில் பணியாளர்கள், பாடசாலை மாணவர்கள், அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.