உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிப். 2ல் ஸ்ரீ கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பிப். 2ல் ஸ்ரீ கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

அனுப்பர்பாளையம்: பூலுவப்பட்டியில் ஸ்ரீ கரியகாளியம்மன் மற்றும் ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் கோவில், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, வரும், 2ம் தேதி நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று மாலை, திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் இருந்து, பக்தர்கள் முளைப்பாரி, தீர்த்தக்குடம் எடுத்து, மேளதாளத்துடன் கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து, சிறப்பு பூஜை நடந்தது. நாளை காலை, 9:00 மணிக்கு, யஜமானர் அனுக்ஞை; 11:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், தீபாராதனை நடக்கிறது.பிப். 1ம் தேதி காலை, இரண்டாம் கால பூஜை; மாலையில், புண்யாஹவாசனம், மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. பிப். 2ம் தேதி, காலை, 9:35 மணிக்கு மேல், 10:35 மணிக்குள், மீன லக்னத்தில், ஸ்ரீ கரியகாளியம்மன், ஸ்ரீ உச்சிமாகாளியம்மன், கன்னிமூல கணபதி, பாலமுருகன், பேச்சியம்மன், தன்னாசியப்பன், சப்த கன்னியருக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் தக்கார் திலகவதி மற்றும் திருப்பணிக்குழுவினர், ஊர் பொது மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !