மணவாழ்வு தரும் ஆபத்சகாயர்
ADDED :5500 days ago
முருகப்பெருமான் முதியவரைப்போல வேடமிட்டு வள்ளியிடம் தன்னை மணந்து கொள்ள வேண்டினார். அவரது வம்பு பேச்சைக் கேட்டு பயந்த வள்ளி ஓட்டம் பிடித்தாள். முருகன் தன் அண்ணனான விநாயகப்பெருமானிடம், தனக்கு உதவி செய்யும்படி வேண்டினார். அவரும் யானையாக வந்து வள்ளியை வழிமறித்தார். காட்டானையின் அச்சுறுத்தலுக்கு பயந்த வள்ளி முதியவரிடம் அடைக்கலம் புகுந்தாள். அப்போது வள்ளியை அணைத்துக் கொண்டு இளையவனாக முருகன் காட்சியளித்தார். ஆபத்து நேரத்தில் சகாயம் செய்பவராக திருத்தணி ஆபத்சகாயவிநாயகர் வீற்றிருக்கிறார். திருத்தணி மலைமீதிருக்கும் இவரை வழிபட்டால் முருகப்பெருமானுக்கு உதவியது போல் விரைவில் மணவாழ்வு உண்டாகும் என்பது ஐதீகம்.