உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலை சூலை ஓலை காலை

பாலை சூலை ஓலை காலை

சிவபெருமானின் அடியவர்களில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்களை சிவபெருமான் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் ஆட்கொண்டார். இதனை பாலை, சூலை, ஓலை, காலை தந்து ஆட்கொண்டார் என்பர். பச்சிளம் பாலகனாய் சம்பந்தர் பசியால் அழுதார். ஈசன் அம்பாளுடன் வந்து பாலைக் கொடுத்து ஆட்கொண்டார். திருநாவுக்கரசர், ஒரு காலத்தில் சமணசமயத்தைப் பின்பற்றினார். அவருக்கு சூலைநோயைக் கொடுத்து (சூலத்தால் குத்துவது போன்ற கடுமையான வயிற்றுவலி) துடிக்கச் செய்தார். அவர் செய்வதறியாமல் சிவபெருமானை வேண்டினார். துன்பம் தீர்ந்தது. சுந்தரர் திருமணம் செய்ய இருந்தபோது முதியவர் வடிவில் வந்தார் சிவபெருமான். நீ என் அடிமை என்று எழுதப்பட்ட ஓலையைக் காட்டி அடிமைப்படுத்திக் கொண்டார். வாதவூரார் குதிரை வாங்க பணத்துடன் சென்றார். ஆவுடையார்கோயிலில் உள்ள குருந்த மரத்தடியில் குருவாக (தட்சிணாமூர்த்தி)இருந்த சிவபெருமான், தன் காலால் தீட்சை தந்து ஆட்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !