ஒரே மனம்! மூன்று குணம்
ADDED :5500 days ago
சத்வ, ரஜோ, தமோ என்னும் குணங்கள் இருக்கின்றன. விருப்பு வெறுப்பு இல்லாமல் தர்மவழியில் நடந்து கடவுளிடம் நம்மை அழைத்துசெல்வது சத்வகுணம். உலக வாழ்வில் ஈடுபடச் செய்து விருப்பு வெறுப்பினை நமக்குள் வளர்ப்பது ரஜோகுணம். சோம்பல், லட்சியமின்மை ஆகியவை தமோ குணம். இந்த குணங்களின் குறியீடுகளாக விபீஷணன், ராவணன், கும்பகர்ண சகோதரர்கள் ராமாயணத்தில் இடம் பெற்றுள்ளனர். மாற்றான் மனைவியை விரும்பிய ராவணனை நல்வழிப்படுத்த விபீஷணன் அறிவுரை கூறுகிறான். ஆனால், அண்ணன் கேட்க மறுத்ததால் ராமபிரானிடம் சரணடைகிறான். ஒரே தாயின் வயிற்றில் பிறந்த. மாறுபட்ட குணங்களைக் கொண்ட சகோதரர்களை போல, ஒரே மனதில் மூன்று குணங்களும் தோன்றுகின்றன.