/
கோயில்கள் செய்திகள் / பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்கிறார்கள். இதற்கு சரியான பொருள் என்ன?
பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்கிறார்கள். இதற்கு சரியான பொருள் என்ன?
ADDED :5500 days ago
ஒரு செயலைத் துவங்கினால் அதை நல்லபடியாக முடிக்கவேண்டும். இதற்கு நல்ல திட்டமும் மனஉறுதியும் தெய்வபலமும் வேண்டும். திட்டமிடாமல், மனஉறுதியும் இல்லாமல் ஒரு செயலைத் துவங்கினால் அதை முடிக்க முடியாமல் திண்டாடுவோம். அப்போது, பலரும் பலவிதமாக ஆலோசனை சொல்லி குழப்புவர். அப்போது, செயலைத் தொடங்கியவருக்கு அங்கும் இங்கும் தாவும் குரங்கு போன்ற மனநிலை ஏற்பட்டு, எடுத்த செயலை முடிக்கா மலேயே விட்டு விடுவார்கள். ஒரு செயலைச் செய்யத் துவங்குவது என்பதை பிள்ளையார் பிடிப்பது என்றும், அது சரி வர நடக்காமல் போனால் அங்குமிங்கும் தாவும் குரங்காய் முடிந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.