மாதநாட்களில் சூரியனுக்குரியது எது?
ADDED :5500 days ago
மேஷம் முதலான 12 ராசிகளில் சூரியன் சஞ்சரிப்பதையே 12 தமிழ் மாதங்களாகக் கணக்கிடுகிறோம். ஒரு ராசியில் சுமார் 30 நாட்கள் சூரியன் சஞ்சரிக்கிறார். ஒரு ராசியில்இருந்து அடுத்த ராசிக்கு சூரியன் பிரவேசிக்கும் நேரத்தையே மாதப்பிறப்பு என்றும், மாத சங்கராந்தி என்றும் சொல்கிறோம். தை மாதப்பிறப்பன்று மகரராசிக்குள் சூரியன் நுழைவதால், மகர சங்கராந்தி ஆகிறது. ஆக, தமிழ் மாதப்பிறப்பே சூரிய வழிபாடு செய்ய ஏற்ற நாள்.