உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓங்காளியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்

ஓங்காளியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்

ஓமலூர்: ஓங்காளியம்மன் கோவில் தேரோட்டம், கோலாகலமாக நடந்தது. ஓமலூர், ஓங்காளியம்மன், மாரியம்மன் கோவில் பண்டிகை, கடந்த, 17ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, கம்பம் நடுதல், சக்தி அழைத்தல் நடந்தது. தினமும், அம்மன் சன்னதியில் அபி?ஷகம், அலங்காரம் நடந்தது. நேற்று மாலை, 6:00 மணிக்கு, காளியம்மன் தேரோட்டம் துவங்கியது. மேள, தாளம் முழங்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில், கோவிலை சுற்றி, தேர் வலம் வந்து, நிலையை அடைந்தது. இதில், கோவில் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இன்று மாலை, 4:00 மணிக்கு, மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !