உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்பே அனைத்தும்!

அன்பே அனைத்தும்!

அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை. திரும்பி வந்த ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது; வேறொருத்தியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது. மற்றுமொருத்தியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது. முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு திரும்பி வந்தாள். அவளிடம் அதற்கான காரணத்தைக் கேட்டார் ஆசிரியை.

அந்த மாணவி பதில் சொன்னாள்: நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது; செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது; சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன். குஞ்சுப் பறவையைப் பார்த்தேன்; தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன் ... என்றாள்.

அவளை கட்டியணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார்: அன்பு என்றால் இதுதான். ஒன்றுமே கொடுக்க வேண்டாம். எதையுமே பறிக்காமல் இருந்தால் அதுவே போதும். எதையும் எவரையும் காயப்படுத்தாமல் இருப்போம். நாம் உலகுக்கு எதையேனும் கொடுக்க வேண்டுமென நினைத்தால், அன்பைக் கொடுப்போம். ஏனெனில், உலகில் எங்கும் பரவிக் கிடப்பது அன்பு ஒன்றுதான். ஆனால் உலகம் அதிகமாக ஏங்கிக் கிடப்பதும் அதே அன்புக்காகத்தான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !