பக்தன், அடியார் இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் என்ன வித்தியாசம்?
பக்தன் என்றால் பகவானிடம் பிரேமை கொண்டு அதன் வெளிப்பாடாக பகவானுக்கு சேவை செய்பவன். அடியார் என்பது இரண்டு வகைப்படும். பகவானிடம் பக்தியை அடைந்துவிட வேண்டுமென்று சேவை செய்பவர்களும் உண்டு. அடையணும் என்று சேவை செய்பவர்களை அடியார்கள் என்று சொல்லலாம். இந்த பக்தியை இரண்டு வகையாக சாஸ்திரம் பிரிக்கிறது. சாதன பக்தி, பிரேம பக்தி என்று. சாதன பக்தி என்றால், கோயிலுக்குச் செல்வது, பாராயணம் செய்வது, பூஜை, ஜபம் முதலியன செய்வது, நாம சங்கீர்த்தனம் பண்ணுவது என்பது. ஆனால், உண்மையான பக்தி என்பது, அந்த பூஜை செய்யும்போதோ, பாராயணம் பண்ணும்போதோ, நாமசங்கீர்த்தனம் செய்யும்போதோ நமக்கு உள்ளம் உருகி, மயிர்க்கூச்சல் ஏற்பட்டு ஒரு சொட்டு கண்ணீர் வருகிறதே, அந்த அனுபவத்தில் இருப்பவர்கள்தான் பக்தர்கள். புரியும் படியாகச் சொல்வதானால், சம்ஸ்க்ருதத்தில பக்தர் என்பதை தமிழில் அடியார் எனலாம். அடியேன் என்று சொல்வார்கள் இல்லையா? பகவானுக்கு நான் தாஸன் என்பதே அடியேன். அது மருவி அடியார் ஆனது.