உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிந்தனைத் தரிசிக்க யாசகியாகவே வருவேன்!

கோவிந்தனைத் தரிசிக்க யாசகியாகவே வருவேன்!

அடியார்கள் குழு ஒன்று பூரி - ஜகந்நாதரைத் தரிசிக்க வந்தது. அக்குழுவில், குருவின் மனைவியும் தோழி ஒருத்தியுடன் இருந்தார். அவர்கள் பலராமன் எனும் செல்வந்தரின் விடுதியில் தங்கியிருந்தார்கள். பலராமனின் சகோதரர் அப்பகுதியில் மிகுந்த செல்வாக்கு உடையவர். அதன் காரணமாக, பூசாரிகளில் முக்கியஸ்தரான கோவிந்தசிங்காரி என்பவர், குருவின் மனைவியான அந்தப் பெண்மணியிடம் வந்து, அம்மா! பல்லக்கு ஒன்றில் உங்களை அமரவைத்து, கோயிலுக்கு அழைத்துச் செல்கிறேன். என வேண்டினார். ஆனால் பெண்மணியோ, ஐயா! கோவிந்தனைத் தரிசிக்க, நான் ஒரு யாசகியைப் போலவே வருவேன். தங்கள் சலுகையை ஏற்க மாட்டேன். மன்னியுங்கள்! என்று கூறி மறுத்துவிட்டார். அந்தப் பெண்மணிதான் - அன்னை சாரதாதேவியார்; ஸ்ரீராமகிருஷ்ணரின் துணைவியார். தூய்மையான அன்பாலும் நடவடிக்கைகளாலும் உயர்ந்தவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !