கோயிலில் உள்ள அரச மரத்தை மாலை நேரத்தில் சுற்றக் கூடாது என்கிறார்களே, சரியா?
ADDED :3559 days ago
அரச மரம் காலை வேளைகளில்தான் ஆக்சிஜன் எனும் நல்ல காற்றை வெளிவிடுகிறது என்று அறிவியல் சொல்கிறது. மாலை நேரத்துக்குப் பின் இரவு முழுவதும் அது கெட்ட காற்றைத்தான் வெளியே விடுகிறது. எனவே, காலை வேளைகளில்தான் அரச மரத்தைப் பிரதட்சிணம் செய்ய வேண்டும். பொதுவாக, அரச மரத்தை சனிக்கிழமைகளில்தான் தொடவேண்டும். மற்ற நாட்களில் அதனைத் தொடக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. அரச மரத்துக்கு நெருக்கமாக பிரதட்சிணம் செய்ய வேண்டும். மேலும், அரச மரத்தின் நிழலில் கூட இரவில் தங்கக் கூடாது என்று சாஸ்திரம் விதிக்கிறது.