உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண் குதிரா.... குதிரையா?

மண் குதிரா.... குதிரையா?

பளபளப்பாக இருப்பதைப் பார்த்து, அதாவது வெளித் தோற்றத்தைப் பார்த்து நாம் ஏமாந்து போய்விடக்கூடாது என்பதற்காகவே, மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே எனப் பழமொழியாகவே சொல்லிவைத்தார்கள், பெரியோர்கள். குதிர் என்பது கிராமங்களில், நெல் கொட்டி வைக்கப் பயன்படும் ஒன்று. அடிப்பாகம் சற்று சிறுத்தம், நடுப்பாகம் நன்கு பெருத்தும், மேற்பாகம் சிறுத்தும் இருக்கும். அதைச் சாணம் போட்டு மெழுகிப் பளபளவென வைத்திருப்பார்கள். அதுபோல, நதிகளிலும் சிறுசிறு மணல் திட்டுகள் இருக்கும். இவற்றையும் மண் குதிர் என்பார்கள். ஆற்றில் நீர்வரத்து குறைந்த காலத்தில், இவை சிறிது மேலே எழும்பிப் பளபளவென இருக்கும். இதை நம்பிக் காலை வைத்தோமானால், பளிச்சென்று நம்மை உள்ளே இழுத்துவிடும். இப்படிப்பட்ட மண் குதிர்களை நம்பி ஆற்றில் இறங்கக்கூடாது; ஆபத்து உண்டாகும் என்பதை உணர்த்துவதற்காகவே, மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்றார்கள். அதுவே மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே என்று மாறிவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !