பிரேமை!
ADDED :3559 days ago
புரந்தரதாசரின் மனைவிக்கு தாங்கமுடியாத வருத்தம். எப்போதும் அவர், விட்டல விட்டல என்று கூறிக் கொண்டே இருக்கிறாரே. குடும்பத்தைக் கவனிப்பதில்லையே என்று. உடனே, ருக்மாயி அன்னையிடம் சென்று புரந்தரதாசரைக் கண்டிக்கச் சொல்ல வேண்டும் என்று நினைத்து, வெளியே கிளம்பினாள். வாசலில் ருக்மாயி அன்னை நின்றிருந்தாளாம். ஆனந்த அதிர்ச்சியுடன் ருக்மாயியை வரவேற்ற புரந்தரதாசரின் மனைவி, தேவி வந்த காரணத்தைக் கேட்டதும் மூர்ச்சை போட்டு விடாத குறையாக பிரமித்தாளம். என் விட்டலன் எப்போதும், புரந்தான்.... புரந்தரன் என்றே புலம்புகிறான். குடும்பத்தைக் கவனிப்பதே இல்லை. அதை உன்னிடம் சொல்லி, என் கணவரைக் கண்டிக்கச் சொல்லலாமே என வந்தேன் என்றாள்.