உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தை மாத பவுர்ணமி: கும்மியடித்து வழிபாடு

தை மாத பவுர்ணமி: கும்மியடித்து வழிபாடு

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், தை மாத பவுர்ணமியை முன்னிட்டு, பெண்கள் கும்மியடித்து சிறப்பு வழிபாடு நடத்தினர். குமாரபாளையம், வேதாந்தபுரம் எம்பெருமாள் காலனியில், தை மாத பவுர்ணமியையொட்டி கும்மியடித்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கடந்த, ஜன., 30ல், துவங்கிய நிகழ்ச்சியில், நாள்தோறும் விநாயகருக்கு பல்வேறு உணவு வகைகளை படைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. நேற்று, பச்சைமாவு, தேங்காய், வாழைப்பழம் உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள் படைக்கப்பட்டு, பெண்கள் கும்மி பாட்டு பாடி, கும்மியடித்து கொண்டாடினர். இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ஆண்டுதோறும் இந்த பகுதியில் கும்மியடித்து, இறைவனுக்கு பிடித்த படையல்கள் வைத்து படைத்து வணங்கி வந்தால், சகல ஐஸ்வர்யங்களும் கைகூடும் என்ற நம்பிக்கை உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !