காளியம்மன் கோவில் திருவிழா: தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :3159 days ago
இடைப்பாடி: குப்பனூர் காளியம்மன் கோவில் திருவிழாவில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். இடைப்பாடி தாலுகா, பூலாம்பட்டி அருகே, குப்பனூரில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா, கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் நள்ளிரவு, காளியம்மன் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. நேற்று மாலை நடந்த குண்டம் விழாவில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக, கோவில் நிர்வாகிகள், கரகம் எடுத்தும், அலகு குத்தியும் தீயில் இறங்கினர். பெண்கள் பலர், குழந்தைகளுடன் தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.