உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதி விழா

மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதி விழா

மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூசப் பெருவிழாவில், தைப்பூச ஜோதியை, பங்காரு அடிகளார் ஏற்றிவைத்தார். மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும், தைப்பூச விழா நடைபெறும். இந்த ஆண்டு, தைப்பூச விழாவையொட்டி, டிசம்பர் 14ல், தைப்பூச சக்தி மாலை அணிந்து, சக்தி விரதம் இருந்து, இருமுடி எடுத்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, சுயம்பு அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். நேற்று முன்தினம் இரு முடிவிழா நிறைவடைந்தது. தொடர்ந்து, தைப்பூச விழாவையொட்டி, அதிகாலை, 3:00 மணிக்கு, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை, 4:30 மணிக்கு, மங்கல இசையுடன், விழா துவங்கியது.

பங்காரு அடிகளார் வீட்டின் முன், கோபூஜை நடைபெற்றது. அதன் பின், குரு ஜோதியை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர், லட்சுமி பங்காரு அடிகளார் ஏற்றிவைக்க, ஐந்து பெண்கள், ஜோதியை வேப்பிலைச் சங்கிலிகளால் இணைத்து எடுத்து வந்தனர். ஜோதி ஊர்வலத்தை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர்கள், அன்பழகன், செந்தில்குமார் துவக்கி வைத்தனர். அங்கிருந்து புறப்பட்டு, ஜோதி ஏற்றும் இடத்திற்கு ஊர்வலம் வந்தடைந்தது. தொடர்ந்து, பங்காரு அடிகளார், தைப்பூச ஜோதியை ஏற்றி வைத்தார். தமிழகம் மட்டும் இன்றி, வெளிநாடுகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். விழா ஏற்பாடுகளை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆதிபராசக்தி மன்றத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !