உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயில் குளத்தில் தெப்பத்தேர்

ராமேஸ்வரம் கோயில் குளத்தில் தெப்பத்தேர்

ராமேஸ்வரம், தை பூசத்தையொட்டி, ராமேஸ்வரம் கோயில் பர்வதவர்த்தினி அம்மன் சமேத ராமநாதசுவாமி லெட்சுமணர் தீர்த்த குளத்தில் தெப்ப தேரில் வலம் வந்தனர். முன்னதாக சுவாமி, அம்மன், பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப வாகனத்தில் புறப்பாடாகியதும் கோயில் நடை சாத்தப்பட்டது. திருக்கோயில் உபகோயிலான லெட்சுமணர் கோயிலில் சுவாமி, அம்மன் எழுந்தருளியதும், கோயில் குருக்கள் மகா தீபாராதனை நடத்தினர். பின், அங்குள்ள லெட்சுமணர் தீர்த்த குளத்தில் மலர்களால் அலங்கரித்த தெப்ப தேரில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் தெப்ப தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !