கொடைக்கானலில் அந்தோணியார் திருவிழா
ADDED :3150 days ago
கொடைக்கானல் : கொடைக்கானலில் டவுன் பதுவை அந்தோணியார் திருவிழா நடந்தது. இந்த ஆலயத்தில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் ஜெப மாலையும், அதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் நடந்தது. சென்பகனுார் பாதிரியார் சார்லி மறையுரையாற்றினார். இரவு 8:30 மணிக்கு அலங்கார மின் தேர்பவனியும், நேற்று மதியம் 1:00 மணிக்கு சப்பரபவனியும் நடந்தது. மாலை 6:00 மணிக்குமதுரை இரயிலார் நகர் பாதிரியார் ஜேம்ஸ் பால்ராஜ் நன்றி திருப்பலி நிகழ்த்தினார். கொடியிறக்கம் நடந்தது. இருதயாண்டவர் கோயில் பாதிரியார் ஜெரோம் எரோணிமுஸ், பாதிரியார்கள் பால்ராஜ், விக்டர் லுாயுஸ் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயிலின் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.