மழை வேண்டி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :3099 days ago
ஈரோடு: ஈரோடு, வெட்டுக்காட்டுவலசு சைவமாரியம்மன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. கடும் வறட்சி, குடிநீர் பஞ்சம், விவசாயம் பாதிப்பு போன்ற பிரச்னைகளுக்கு தீர்வாக, மழை பெய்ய வேண்டி, கோவில் நிர்வாகம் சார்பாக, யாக பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, நேற்று காலை, 6:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாகமம், சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலையில், பூர்ணாஹூதி, சிறப்பு பூஜை நடந்தது.