உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரிய மாரியம்மனுக்கு நாளை சிறப்பு அபிஷேகம்

பெரிய மாரியம்மனுக்கு நாளை சிறப்பு அபிஷேகம்

ஈரோடு: தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, ஈரோடு பெரிய  மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. ஈரோட்டில், காவிரி  ஆற்றின் தெற்கே அமைந்துள்ள, பெரியமாரியம்மன் கோவிலில், தமிழ் புத்தாண்டு வருடப்பிறப்பை முன்னிட்டு, நாளை சிறப்பு
அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. இதில் பக்தர்கள் திரளாக  கலந்து கொள்ள வேண்டும் என, பெரியமாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு சிறப்பு அபிஷேக விழாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள்,  காலை, 6:00 மணிக்கு, கைக்கோளன் தோட்டம், பிள்ளையார்  கோவிலுக்கு வர வேண்டும் என, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !