எமதர்மனை வழிபடலாமா?
ADDED :3493 days ago
எட்டு திசைகளில் எமன் தென்திசைக்கு அதிபதி. இவரை வழிபட்டு வரம்பெற வேண்டிய அவசியமில்லை. எமன் வழிபட்டு வரம் பெற்ற தலங்களை தரிசித்தாலே இவரின் அருளும் கிட்டும். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ளது தருமபுரம் யாழ்மூரிநாத சுவாமி கோவில். திருக்கடையூரில் மார்க்கண்டேயரின் உயிரைக் காக்க சிவன், எமனை உதைக்கிறார். சிவனிடம் பாவமன்னிப்பு கேட்டு எமன் வழிபட்டு பேறு பெற்ற தலம் இது. இங்கு சனிக்கிழமை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.