உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோடி லிங்க ஸ்நானம்!

கோடி லிங்க ஸ்நானம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் நகருக்கு அருகில் திரின்பாக் என்னுமிடத்தில் கோதவரி நதி உற்பத்தியாகிறது. இது நதிப்பிரவாகம் எடுப்பதற்கு முன் கவுதமரிஷி ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் கோடி லிங்கம் ஸ்தாபித்து பிரதிஷ்டை செய்தார். அதில் ஒரே ஒரு லிங்கத்தை மட்டும் எடுத்து கோதாவரிக் கரையில் பிரதிஷ்டை செய்தார். இன்றும் அந்த லிங்கம் பிரசித்தி பெற்ற சிவன்கோயிலாக உள்ளது. கோதாவரி, கங்கா துவாரத்திலிருந்து வெளிவந்ததால் கவுதமி என்றும், கோமுகத்திலிருந்து வந்ததால் கோதாவரி என்றும் பெயர் பெற்றது. இந்த கோதாவரி நதியில் 99,99,999 லிங்கங்கள் நீருக்கடியில் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அதன்õல் இங்கு நீராடினால் கோடி லிங்க ஸ்நானம் செய்த பலன் உண்டு என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !