சப்தவர்ணம்!
ADDED :3483 days ago
நெல்லை மாவட்டம், சிவசைலம் பரம கல்யாணி சமேத சிவசைலநாதர் கோயில் பங்குனி திருக்கல்யாண உற்சவம். அருகேயுள்ள ஆழ்வார்குறிச்சியில் நடைபெறும். 11ம் நாள் தேரோட்டம் முடிந்து விடியற்காலையில் சப்தவர்ணம் என்னும் அபூர்வ நிகழ்ச்சி நடக்கும். இவ்வேளையில் சிவபெருமான் மடியில் பரம கல்யாணி தனது வலது கையை வைத்து புஷ்பப் பல்லக்கில் அமர்ந்து காட்சி தருவார். தீர்க்க சுமங்கலிகள் இந்தத் தெய்வத் தம்பதியை வணங்கினால் மாங்கல்ய பலம் நிலைக்கும் என்பது நம்பிக்கை!