லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :3123 days ago
உப்பிடமங்கலம்: உப்பிடமங்கலத்தில் உள்ள, லட்சுமி நாராயண பெருமாள் கோவில், 500 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோவில். ஏகாதசி
விழாவை முன்னிட்டு, லட்சுமி நாராயணபெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, திருமஞ்சனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பல்வேறு மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, துளசி மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கிராமமக்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.