துர்க்கை அம்மனுக்கு ராகு கால பூஜை
ADDED :3115 days ago
ஊத்துக்கோட்டை: ராகு காலத்தை ஒட்டி, துர்க்கை அம்மனுக்கு நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.சுருட்டப்பள்ளி, சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், கோவில் வளாகத்தில் உள்ள துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். நேற்று முன்தினம், மாலை, 3:30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.பக்தர்கள் எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, அம்மனை வழிபட்டனர்.