உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கஜகிரி மலைக்கோவிலில் கிருத்திகை வழிபாடு

கஜகிரி மலைக்கோவிலில் கிருத்திகை வழிபாடு

ஆர்.கே.பேட்டை : கஜகிரி செங்கல்வராயன் மலைக்கோவிலில்,  நேற்று, கிருத்திகையையொட்டி, சிறப்பு தரிசனம் நடந்தது. இதில்,  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர். பள்ளிப்பட்டு அடுத்த, நெடியம் கஜகிரி செங்கல்வராயன்
மலைக்கோவிலில், நேற்று, கிருத்திகையையொட்டி, சிறப்பு தரிசனம் நடந்தது. காலை 10:00 மணிக்கு, மூலவர் செங்கல்வராய சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
சொரக்காய்பேட்டை, வெங்கம்பேட்டை, பொதட்டூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, வந்திருந்த திரளான பக்தர்கள், வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
இதேபோல், அத்திமாஞ்சேரிபேட்டை, நெல்லிக்குன்றம் சுப்ரமணிய சுவாமி மலைக்கோவில், அம்மையார்குப்பம், பொதட்டூர்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவில்களிலும், நேற்று, சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !