விஷ்வக்ஸேனர் என்பவர் யார்?
ADDED :3292 days ago
விஷ்ணுவிற்கு பிரியமான சேனை நாயகர் என்பதால் இப்பெயர் பெற்றார். விஸ்வ முழுமையான, ஸேனர் படைத்தலைவர் என்பது பொருள். இலக்கணப்படி இச்சொற்கள் இணைந்து விஷ்வக்ஸேனர் என்றானது. வைணவ குருபரம்பரையில் மூன்றாவது குருநாதராக போற்றப்படுகிறார். யானை முகம் கொண்டவர் என்பது இவரது சிறப்பு.