திருஷ்டி போக்குபவர்
ADDED :3289 days ago
குபேரனைப் பற்றிய குறிப்புகள் புத்தமத இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. சீனா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான் நாடுகளில் சிரிக்கும் நிலையில் உள்ள குபேரன் சிலையை கண்திருஷ்டி போக்க வழிபடுகின்றனர். குள்ள உருவம், கள்ளமில்லாத சிரிப்பு, கனத்த தொப்பை, கையில் பொன் மூடை, ஆபரணங்கள் என, பொன் நிறத்தில் இவர் காட்சியளிக்கிறார். இவர் இருக்கும் இடத்தில் செல்வ வளம் நிறைந்திருக்கும் என்ற சீன மக்கள் நம்புகின்றனர்.