முருகனுக்கு ஒருநாள் திருநாள்
ADDED :3165 days ago
வைகாசி மாதத்தில் சந்திரன் தன் முழு ஆற்றலுடன் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனால் இந்த மாதத்திற்கு வடமொழியில் வைசாகம் என்று பெயர். தமிழில் இது வைகாசி என அழைக்கப்படுகிறது. இந்த பவுர்ணமி நன்னாளை வைகாசி விசாகம் என கொண்டாடுகின்றனர். முருகன் அவதாரம் இந்த நாளில் நிகழ்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.விசாகத்தில் அவதரித்ததால் விசாகன் என்று முருகனுக்குப் பெயருண்டு. வி என்றால் பறவை (மயில்), சாகன் என்றால் சஞ்சரிப்பவன். மயில் மீது வலம் வரும் இறைவன் என்பது பொருள். முருகனால் வதம் செய்யப்பட்ட சூரபத்மனின் உடலின் ஒரு பகுதி மயிலாக மாறியது. அதையே முருகன் தனது வாகனமாக ஏற்றார். ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்த திருநாளில் (ஜூன் 7) விரதம் இருந்து முருகனை வழிபட, நினைத்தது நிறைவேறும்.